தமிழர் சிற்பக்கலை
தமிழர் சிற்பக்கலை https://ta.wikipedia.org/s/i7h கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigation Jump to search ஆனந்தத் தாண்டவ நடராசர் சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண் , மரம் , தந்தம் , கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது. பொருளடக்கம் 1 சிற்பம் செய்யும் பொருட்கள் 2 தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள் 3 சிற்பங்களின் வகைகள் 4 உசாத்துணை 5 ஆதாரங்கள் 6 வெளி இணைப்புகள் சிற்பம் செய்யும் பொருட்கள் [ தொகு ] மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன [1] . "கல்லும் உலோகமும் செங...

Comments
Post a Comment